sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

89 ரன்னுக்கு சுருண்டது குஜராத் * டில்லி அணி கலக்கல் வெற்றி

/

89 ரன்னுக்கு சுருண்டது குஜராத் * டில்லி அணி கலக்கல் வெற்றி

89 ரன்னுக்கு சுருண்டது குஜராத் * டில்லி அணி கலக்கல் வெற்றி

89 ரன்னுக்கு சுருண்டது குஜராத் * டில்லி அணி கலக்கல் வெற்றி


ADDED : ஏப் 18, 2024 12:26 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது. குஜராத் அணி 89 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. நேற்று ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத், டில்லி அணிகள் மோதின. குஜராத் அணியில் உமேஷ் யாதவுக்குப் பதில் தமிழக அணியின் சந்தீப் வாரியர் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

திணறல் துவக்கம்

குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில், சகா இணைந்து துவக்கம் கொடுத்தனர். இஷாந்த் சர்மா இரண்டாவது ஓவரை வீசினார். இதன் நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சுப்மன் (8), அடுத்த பந்தில் பிரித்வி ஷாவிடம் 'கேட்ச்' கொடுத்து அவுட்டானார்.

பின் வந்த சாய் சுதர்சன், கலீல் அகமது ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார். நீண்ட நேரம் தடுமாறிக் கொண்டிருந்த சகா 2 ரன் (10 பந்து) மட்டும் எடுத்து, முகேஷ் குமார் 'வேகத்தில்' போல்டானார்.

இதன் பின் குஜராத் பேட்டர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 9 பந்தில் 12 ரன் எடுத்த சாய் சுதர்சன், ரன் அவுட்டானார். மீண்டும் மிரட்டிய இஷாந்த், அனுபவ டேவிட் மில்லரை (2) அவுட்டாக்க, குஜராத் அணி 5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 30 ரன் மட்டும் எடுத்து தள்ளாடியது. பின் ராகுல் டிவாட்யா, அபினவ் மனோகர் இணைந்தனர்.

ஸ்டப்ஸ் அபாரம்

போட்டியின் 9 வது ஓவரை வீசினார் ஸ்டப்ஸ். இதன் 3 வது பந்தில் அபினவ் (8) ரிஷாப்பிடம் 'பிடி' கொடுத்து திரும்பினார். 5வது பந்தில், 'இம்பேக்ட்' வீரராக வந்த ஷாருக்கானை 'டக்' அவுட்டாக்கினார். அடுத்து வந்த 'சீனியர்' ரஷித் கான், ஸ்டப்ஸ், அக்சர் பந்துகளில் பவுண்டரி விளாசினார். மறுபக்கம் டிவாட்யா (10), அக்சர் சுழலில் சிக்கினார். மோகித் சர்மாவும் (4) விரைவில் வெளியேறினார்.

17வது ஓவரை வீசினார் குல்தீப். இதன் 2வது பந்தை காலரிக்கு அனுப்பிய ரஷித் கான், இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார். இவர் 24 பந்தில் 31 ரன் எடுத்து அவுட்டானார். குஜராத் அணி 17.3 ஓவரில் 89 ரன்னுக்கு சுருண்டது. டில்லி சார்பில் முகேஷ் குமார் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.

எளிய வெற்றி

டில்லி அணிக்கு ஜேக் பிராசர் (20), பிரித்வி ஷா (7) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. அபிஷேக் போரல் (15), சந்தீப் வாரியர் 'வேகத்தில்' போல்டானார். ஷாய் ஹோப் (19), ரஷித் கான் சுழலில் சிக்கினார். பின் கேப்டன் ரிஷாப் பன்ட் (16), சுமித் குமார் (9) இணைந்து அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். டில்லி அணி 8.5 ஓவரில் 92/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

13

நேற்று முதல் 6 ஓவரில் டில்லி பவுலர்கள், 4 விக்கெட் சாய்த்தனர். இதையடுத்து இந்த சீசனில் 'பவர் பிளே' ஓவரில் அதிக விக்கெட் சாய்த்த அணி வரிசையில் முதலிடம் பெற்றது டில்லி (13 விக்.,). கோல்கட்டா (11), ராஜஸ்தான் (11) அணிகள் அடுத்து உள்ளன.

78

குஜராத் அணி துவக்க வீரர், விக்கெட் கீப்பர் சகா. நடப்பு ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து சொதப்புகிறார். முதல் நான்கு போட்டியில் 19, 21, 25, 11 ரன் எடுத்த இவர், நேற்றும் 2 ரன்னில் அவுட்டாகினார். இதுவரை 5 போட்டியில் 78 ரன் மட்டும் எடுத்துள்ளார்.

89

நேற்று 89 ரன்னுக்கு சுருண்ட குஜராத் அணி, ஐ.பி.எல்., அரங்கில் தனது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 2023ல் 125/6 ரன் (எதிர்-டில்லி) எடுத்ததே குறைவாக இருந்தது.

30 ரன், 4 விக்.,

குஜராத் அணி நேற்று 'பவர் பிளே' ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 30 ரன் மட்டும் எடுத்திருந்தது. இந்த ஐ.பி.எல்., தொடரில் முதல் 6 ஓவரில் எடுக்கப்பட்ட இரண்டாவது குறைந்தபட்ச ரன்னாக இது அமைந்தது. முன்னதாக ஐதராபாத்துக்கு எதிராக பஞ்சாப் அணி 27/3 ரன் எடுத்தது முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் (31/2, எதிரணி-டில்லி), சென்னை (32/2, டில்லி) அணிகள் 3, 4வது இடத்தில் உள்ளன.






      Dinamalar
      Follow us