/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மீண்டும் மழை ஆட்டம் * 'பிளே ஆப்' சுற்றில் ஐதராபாத்
/
மீண்டும் மழை ஆட்டம் * 'பிளே ஆப்' சுற்றில் ஐதராபாத்
மீண்டும் மழை ஆட்டம் * 'பிளே ஆப்' சுற்றில் ஐதராபாத்
மீண்டும் மழை ஆட்டம் * 'பிளே ஆப்' சுற்றில் ஐதராபாத்
ADDED : மே 16, 2024 10:57 PM

ஐதராபாத்: ஐதராபாத், குஜராத் அணிகள் இடையிலான ஐ.பி.எல்., போட்டி மழை காரணமாக ரத்தானது.
இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடக்க இருந்த லீக் போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோத இருந்தன. இதில் வென்றால், 16 புள்ளியுடன் 'பிளே ஆப்' செல்லலாம் என்ற நிலையில் இருந்தது ஐதராபாத் அணி. ஆனால் தொடர்ச்சியான மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மழை நிற்கும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் மழை தொடர்ந்தது. மைதானத்தில் அதிகமான நீர் தேங்கியது. வேறு வழியில்லாத நிலையில் போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.
மூன்றாவது அணி
ஐதராபாத், குஜராத் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டன. இதனால் 15 புள்ளியுடன் (13 போட்டி) மூன்றாவது அணியாக ஐதராபாத், 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே கோல்கட்டா (19), ராஜஸ்தான் (16) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டன.
டில்லி அணி 14 போட்டியில் 14 புள்ளி பெற்ற போதும், மோசமான ரன் ரேட் (-0.377) காரணமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
சென்னை எப்படி
மீதமுள்ள ஒரு இடத்தை அடுத்த இரு இடத்தை பிடிக்க, பட்டியலில் 4, 6வது இடத்திலுள்ள சென்னை (13 போட்டி, 14 புள்ளி), பெங்களூரு (13ல் 12) அணிகள் இடையில் போட்டி காணப்படுகிறது. நாளை இரு அணிகள் மோதும் போட்டி பெங்களூருவில் நடக்க உள்ளது. இதில் சென்னை வென்றால் 16 புள்ளியுடன் 'பிளே ஆப்' செல்லும். மாறாக பெங்களூரு வெற்றி பெற்றால் இரு அணிகளும் தலா 14 புள்ளி பெறும். ரன் ரேட் அடிப்படையில் முந்தும் அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.