/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தோனி போல 'பினிஷிங்' * உற்சாகத்தில் பட்லர்
/
தோனி போல 'பினிஷிங்' * உற்சாகத்தில் பட்லர்
ADDED : ஏப் 18, 2024 12:20 AM

கோல்கட்டா: ''தோனி, கோலி போல கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றேன்,'' என பட்லர் தெரிவித்துள்ளார்.
கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் கோல்கட்டா (223/6) இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 14 ஓவரில் 128/6 ரன் எடுத்திருந்தது. கடைசி 36 பந்தில் 96 ரன் தேவைப்பட்டன.
இந்நிலையில் களத்தில் இருந்த பட்லர், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 60 பந்தில் 107 ரன் குவித்த இவர், கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து ராஜஸ்தான் (224/8) அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதுகுறித்து பட்லர் கூறியது:
நம்பிக்கையுடன் செயல்பட்டால் எந்த செயலிலும் வெற்றி கிடைக்கும். இது தான் கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் நடந்தது. இத்தொடரின் துவக்கத்தில் 'பார்ம்' இல்லாமல் சற்று தடுமாறிக் கொண்டிருந்தேன். இதனால் ஏமாற்றமான மனநிலை ஏற்படும் போது, உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க முயற்சி செய்தால், இழந்த 'பார்மை' மீட்டு விடலாம் நினைத்தேன்.
தோனி, கோலி போன்ற வீரர்கள் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றி பெறத் செய்துள்ளதை, ஐ.பி.எல்., தொடரில் பலமுறை பார்த்துள்ளேன். இதுபோல நானும் சிறப்பாக செயல்பட முயற்சித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

