/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோல்கட்டாவில் ஐ.பி.எல்., பைனல்: அட்டவணை வெளியீடு
/
கோல்கட்டாவில் ஐ.பி.எல்., பைனல்: அட்டவணை வெளியீடு
ADDED : பிப் 16, 2025 10:59 PM

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் வரும் மார்ச் 22ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. ஈடன் கார்டனில் நடக்கும் முதல் லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, தனது முதல் போட்டியில் மும்பை அணியை மார்ச் 24ல் சென்னையில் சந்திக்கிறது.
'பிளே-ஆப்' சுற்றுக்கான போட்டிகள் ஐதராபாத், கோல்கட்டாவில் நடக்க உள்ளன. இதன்படி ஐதராபாத்தில் தகுதிச் சுற்று-1 (மே 20), 'எலிமினேட்டர்' (மே 21), கோல்கட்டாவில் தகுதிச் சுற்று-2 (மே 23) நடத்தப்படுகிறது. பைனல், வரும் மே 25ல் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது.
இத்தொடருக்கான போட்டிகள் 13 மைதானங்களில் நடத்தப்படுகிறது. சேப்பாக்கம் (சென்னை), வான்கடே (மும்பை), ஈடன் கார்டன் (கோல்கட்டா), சின்னசாமி (பெங்களூரு), அருண் ஜெட்லி (டில்லி), மோடி (ஆமதாபாத்), ராஜிவ் (ஐதராபாத்), சவாய் மான்சிங் (ராஜஸ்தான்), தர்மசாலா (இமாச்சல பிரதேசம்) மைதானங்கள் தவிர்த்து கவுகாத்தி, லக்னோ, மொகாலி, விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்க உள்ளன.
* ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், தகுதிச் சுற்று-1ல் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.
* மூன்று, 4வது இடம் பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்' போட்டியில் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேறிவிடும். வெற்றி பெறும் அணி, தகுதிச் சுற்று-1ல் தோற்ற அணியுடன் தகுதிச் சுற்று-2ல் பங்கேற்கும். இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு 3வது இடம் கிடைக்கும்.
* தகுதிச் சுற்று 1, 2ல் வென்ற அணிகள் பைனலில் விளையாடும்.
நாள் எதிரணி இடம்
மார்ச் 23 மும்பை சென்னை
மார்ச் 28 பெங்களூரு சென்னை
மார்ச் 30 ராஜஸ்தான் கவுகாத்தி
ஏப். 5* டில்லி சென்னை
ஏப். 8 பஞ்சாப் மொகாலி
ஏப். 11 கோல்கட்டா சென்னை
ஏப். 14 லக்னோ லக்னோ
ஏப். 20 மும்பை மும்பை
ஏப். 25 ஐதராபாத் சென்னை
ஏப். 30 பஞ்சாப் சென்னை
மே 3 பெங்களூரு பெங்களூரு
மே 7 கோல்கட்டா கோல்கட்டா
மே 12 ராஜஸ்தான் சென்னை
மே 18* குஜராத் ஆமதாபாத்
* போட்டி மதியம் 3:30 மணிக்கு துவங்கும். மற்றவை இரவு 7:30 மணிக்கு ஆரம்பம்.

