/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.பி.எல்., அட்டவணையில் மாற்றமா
/
ஐ.பி.எல்., அட்டவணையில் மாற்றமா
ADDED : ஏப் 01, 2024 10:04 PM

கோல்கட்டா: கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐ.பி.எல்., போட்டிக்கான தேதியில் மாற்றம் செய்யப்படலாம்.
இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. வரும் ஏப். 17ல் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அன்றைய தினம் கோல்கட்டாவில் 'ராம் நவமி' கொண்டாட்டம் நடக்கவுள்ளது. இதனால் போட்டிக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என கோல்கட்டா போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போட்டியை வேறு தேதியில் நடத்திட பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) முடிவு செய்துள்ளது. ஏப். 16 அல்லது ஏப். 18ல் போட்டியை நடத்திட இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) சி.ஏ.பி., அனுமதி கோரியுள்ளது. இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஈடன் கார்டனில் வரும் ஏப். 17ல் நடக்கும் ஐ.பி.எல்., போட்டியை வேறு தேதியில் நடத்தும்படி கோல்கட்டா போலீசார் கேட்டுக்கொண்டதாக சி.ஏ.பி., சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடரின் பாதியில் அட்டவணையில் மாற்றம் செய்வது கடினமானது. புதிய தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை,'' என்றார்.
சி.ஏ.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கோல்கட்டா-ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ஏப். 16 அல்லது ஏப். 18ல் நடத்திட பி.சி.சி.ஐ.,யிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என்றார்.

