/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இஷான் கிஷான் சதம்: புச்சி பாபு கிரிக்கெட்டில்
/
இஷான் கிஷான் சதம்: புச்சி பாபு கிரிக்கெட்டில்
ADDED : ஆக 16, 2024 11:03 PM

திருநெல்வேலி: புச்சி பாபு கிரிக்கெட் லீக் போட்டியின் ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷான் சதம் விளாசினார்.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. திருநெல்வேலியில் நடக்கும் லீக் போட்டியில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் அணிகள் விளையாடுகின்றன. மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 225 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஜார்க்கண்ட் அணிக்கு இஷான் கிஷான் (114) கைகொடுக்க முன்னிலை பெற்றது. ஆட்டநேர முடிவில் ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 277/7 ரன் எடுத்திருந்தது.
ரயில்வே '570': சேலத்தில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியன் ரயில்வே, குஜராத் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் ரயில்வே அணி 429/6 ரன் எடுத்திருந்தது. நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தில் ரயில்வே அணியின் சஹாப் யுவராஜ் (105*) சதம் விளாசினார். ரயில்வே அணி முதல் இன்னிங்சில் 570 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆட்டநேர முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 155/3 ரன் எடுத்திருந்தது.
ஹரியானா '419':கோவையில் நடக்கும் லீக் போட்டியில் ஹரியானா, மும்பை அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் 288/6 ரன் எடுத்திருந்த ஹரியானாவுக்கு தீரு சிங் (147) கைகொடுத்தார். ஹரியானா அணி முதல் இன்னிங்சில் 419 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இரண்டாம் நாள் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 133/4 ரன் எடுத்திருந்தது.
காஷ்மீர் கலக்கல்: திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் லீக் போட்டியில் சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் அணிகள் விளையாடுகின்றன. சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 278 ரன் எடுத்தது. சுப்மன் கஜுரியா (147*), அப்துல் சமத் (58), பராஸ் தோக்ரா (73) கைகொடுக்க, ஆட்டநேர முடிவில் காஷ்மீர் அணி 349/4 ரன் எடுத்திருந்தது.