/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இஷான், ஸ்ரேயாஸ் ஒப்பந்தம் ரத்து * சாட்டையை சுழற்றிய பி.சி.சி.ஐ.,
/
இஷான், ஸ்ரேயாஸ் ஒப்பந்தம் ரத்து * சாட்டையை சுழற்றிய பி.சி.சி.ஐ.,
இஷான், ஸ்ரேயாஸ் ஒப்பந்தம் ரத்து * சாட்டையை சுழற்றிய பி.சி.சி.ஐ.,
இஷான், ஸ்ரேயாஸ் ஒப்பந்தம் ரத்து * சாட்டையை சுழற்றிய பி.சி.சி.ஐ.,
ADDED : பிப் 28, 2024 11:00 PM

புதுடில்லி: சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் வீரர்களுக்கான 2023-2024ம் ஆண்டுக்கான சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா, கோலி, பும்ரா, ஜடேஜா என நான்கு வீரர்கள் 'ஏ+ கிரேடில்' இடம் பெற்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி சம்பளம் கிடைக்கலாம்.
அஷ்வின், ஷமி, ராகுல் உட்பட 6 பேர் 'ஏ கிரேடில்' (ரூ. 5 கோடி) உள்ளனர். தவிர 'பி கிரேடில்' (ரூ. 3 கோடி) சூர்யகுமார், குல்தீப், ஜெஸ்வால் உட்பட 5 பேர் இடம் பிடித்தனர்.
மூன்று டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் அல்லது 10 'டி-20' போட்டியில் பங்கேற்ற வீரர்கள் தானாக 'சி கிரேடில்' (ரூ. 1 கோடி) இடம் பெறுவர். தற்போது 15 பேர் உள்ளனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துருவ் ஜோரல், சர்பராஸ் கான் 2 டெஸ்டில் பங்கேற்றனர். தர்மசாலா டெஸ்டுக்குப் பின் 'சி கிரேடில்' இடம் பிடிக்க உள்ளனர்.
இருவருக்கு 'கல்தா'
இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 25. இந்திய அணியில் களமிறங்க போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், தானாக ஓய்வு கேட்டு விலகினார். தவிர இரண்டாவது டெஸ்டுக்குப் பின் விலகிய ஸ்ரேயாஸ் என இருவரும் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என பயிற்சியாளர் டிராவிட், பி.சி.சி.ஐ., 'அட்வைஸ்' செய்தது. இருவரும் இதை கண்டுகொள்ளவில்லை. தற்போது சாட்டையை சுழற்றிய பி.சி.சி.ஐ., இருவரையும் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது. இதனால் ஸ்ரேயாஸ் ரூ. 3 கோடி, இஷான் ரூ. 1 கோடி சம்பளம் கிடைக்காது.
இதேபோல சமீபத்திய போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெறாத புஜாரா, தவான், சகால், உமேஷ் யாதவ் பட்டியலில் இடம் பெறவில்லை.
வீரர்கள் சம்பள விபரம்
பி.சி.சி.ஐ., சார்பில் வீரர்கள் இடம் பெற்ற பிரிவுகள் மட்டும் வெளியிடப்பட்டன. முதன் முறையாக இவர்களுக்கான சம்பள விபரம் தெரிவிக்கப்படவில்லை. எனினும் வழக்கமான சம்பளம் தரப்படலாம்.
இதன்படி:
* 'கிரேடு ஏ+' (ரூ. 7 கோடி)
ரோகித், கோலி, பும்ரா, ஜடேஜா
* 'கிரேடு ஏ' (ரூ. 5 கோடி)
அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், ராகுல், சுப்மன், ஹர்திக் பாண்ட்யா
* 'கிரேடு பி' (ரூ. 3 கோடி)
சூர்யகுமார், ரிஷாப் பன்ட், குல்தீப், அக்சர் படேல், ஜெய்ஸ்வால்
* 'கிரேடு சி' (ரூ. 1 கோடி)
ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ், ஷர்துல், ஷிவம் துபே, பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், ரஜத் படிதர்
வேகப்பந்து வீச்சு ஒப்பந்தம்: ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், யாஷ் தயாள், வித்வாத் கவேரப்பா.

