UPDATED : செப் 17, 2024 03:51 PM
ADDED : செப் 15, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெர்த்: ஐ.டி.எப்., டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா வெற்றி பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ஜப்பானின் குராமோச்சியை எதிர்கொண்டார். முதல் செட்டை அன்கிதா 6-0 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டை 6-4 என வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம் 30 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.