sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

7 ரன்னில் சுருண்ட ஐவரி கோஸ்ட்: சர்வதேச 'டி-20' போட்டியில்

/

7 ரன்னில் சுருண்ட ஐவரி கோஸ்ட்: சர்வதேச 'டி-20' போட்டியில்

7 ரன்னில் சுருண்ட ஐவரி கோஸ்ட்: சர்வதேச 'டி-20' போட்டியில்

7 ரன்னில் சுருண்ட ஐவரி கோஸ்ட்: சர்வதேச 'டி-20' போட்டியில்


ADDED : நவ 25, 2024 10:55 PM

Google News

ADDED : நவ 25, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாகோஸ்: சர்வதேச 'டி-20' போட்டியில் ஐவரி கோஸ்ட் அணி 7 ரன்னுக்கு சுருண்டது.

நைஜீரியாவில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 'சப்-ரீஜினல்' ஆப்ரிக்க தகுதிச் சுற்று, 'குரூப்-சி' போட்டிகள் நடக்கிறது. லாகோஸ் நகரில் நடந்த லீக் போட்டியில் நைஜீரியா, ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நைஜீரியா அணிக்கு, செலிம் சலாவ் (112) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 271 ரன் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய ஐவரி கோஸ்ட் அணி, 7.3 ஓவரில் 7 ரன்னுக்கு சுருண்டு, 264 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஐவரி கோஸ்ட் சார்பில் 6 பேர் 'டக்-அவுட்' ஆகினர். அதிகபட்சமாக ஓட்டாரா முகமது 4 ரன் எடுத்தார். நைஜீரியா சார்பில் ஐசக், உசேனி தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

மோசமான ஸ்கோர்: சர்வதேச 'டி-20' அரங்கில் ஒரு இன்னிங்சில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது ஐவரி கோஸ்ட். இதற்கு முன் மங்கோலியா (எதிர்: சிங்கப்பூர், 2024), ஐல் ஆப் மேன் (எதிர்: ஸ்பெயின், 2023) அணிகள் 10 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆகின.

தவிர, சர்வதேச 'டி-20' போட்டி வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் 3வது சிறந்த வெற்றியை பதிவு செய்தது நைஜீரியா. முதலிரண்டு இடங்களில் ஜிம்பாப்வே (290 ரன், எதிர்: காம்பியா, 2024), நேபாளம் (273 ரன், எதிர்: மங்கோலியா, 2023) அணிகள் உள்ளன.






      Dinamalar
      Follow us