/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜெமிமா சதம்...இந்தியா வெற்றி: தொடரை கைப்பற்றி அசத்தல்
/
ஜெமிமா சதம்...இந்தியா வெற்றி: தொடரை கைப்பற்றி அசத்தல்
ஜெமிமா சதம்...இந்தியா வெற்றி: தொடரை கைப்பற்றி அசத்தல்
ஜெமிமா சதம்...இந்தியா வெற்றி: தொடரை கைப்பற்றி அசத்தல்
ADDED : ஜன 12, 2025 11:24 PM

ராஜ்கோட்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் கடந்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி 116 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள அயர்லாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. ராஜ்கோட்டில் 2வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (73), பிரதிகா ரவால் (67) வலுவான அடித்தளம் அமைத்தனர். ஹர்லீன், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். ஹர்லீன், 89 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் (10) நிலைக்கவில்லை. ஆர்லீன் கெல்லி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜெமிமா, ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர், 91 பந்தில், 102 ரன் எடுத்து அவுட்டானார்.
இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 370 ரன் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி (80) ஆறுதல் தந்தார். சாரா போர்ப்ஸ் (38), லாரா டெலானி (37) நிலைக்கவில்லை. 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 254 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3, பிரியா மிஷ்ரா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகி விருதை ஜெமிமா வென்றார்.
தீப்தி '100'
இந்திய சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' தீப்தி சர்மா, தனது 100வது ஒருநாள் போட்டியில் (127 விக்கெட், 2143 ரன்) பங்கேற்றார். தவிர இவர், 124 சர்வதேச 'டி-20'ல் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 ஒருநாள், 100 'டி-20' போட்டியில் களமிறங்கிய 2வது இந்திய வீராங்கனையானார் தீப்தி. ஏற்கனவே இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், 141 ஒருநாள், 178 சர்வதேச 'டி-20'ல் விளையாடி உள்ளார்.
ஏழு ஆண்டுகளுக்கு பின்...
கடந்த 2018ல் இந்திய அணியில் அறிமுகமான ஜெமிமா ரோட்ரிக்ஸ், 7 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் சர்வதேச சதத்தை நேற்று பதிவு செய்தார். ஜெமிமா கூறுகையில், ''சர்வதேச அரங்கில் முதல் சதம் அடித்ததில் மகிழ்ச்சி. இத்தருணத்திற்காக 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்னும் நிறைய சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்க விரும்புகிறேன்,'' என்றார்.