/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜார்க்கண்ட் அணி வெற்றி: புச்சி பாபு கிரிக்கெட்டில்
/
ஜார்க்கண்ட் அணி வெற்றி: புச்சி பாபு கிரிக்கெட்டில்
ஜார்க்கண்ட் அணி வெற்றி: புச்சி பாபு கிரிக்கெட்டில்
ஜார்க்கண்ட் அணி வெற்றி: புச்சி பாபு கிரிக்கெட்டில்
ADDED : ஆக 18, 2024 10:49 PM

சேலம்: குஜராத் அணிக்கு எதிரான புச்சி பாபு கிரிக்கெட் லீக் போட்டியில் அசத்திய ரயில்வே அணி 139 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சேலத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியன் ரயில்வே 570, குஜராத் 270 ரன் எடுத்தன. ரயில்வே அணி 2வது இன்னிங்சில் 138/5 ('டிக்ளேர்') ரன் எடுத்தது. பின் 482 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 342 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. மனன் ஹிங்ராஜியா (102) சதம் கடந்தார். ரயில்வே சார்பில் அயன் சவுத்தரி 5 விக்கெட் சாய்த்தார்.
திருநெல்வேலியில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 225, ஜார்க்கண்ட் 289 ரன் எடுத்தன. ம.பி., அணி 2வது இன்னிங்சில் 238 ரன் எடுத்தது. பின் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி 175/8 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் அணிக்கு இஷான் கிஷான் (41*) கைகொடுத்தார்.
மும்பை 'டிரா': கோவையில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் ஹரியானா 419, மும்பை 245 ரன் எடுத்தன. 'பாலோ-ஆன்' பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சில் 321 ரன் எடுத்தது. பின் 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹரியானா அணி, ஆட்டநேர முடிவில் 105/6 ரன் மட்டும் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது.
காஷ்மீர் ஆறுதல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் சத்தீஸ்கர் 278, காஷ்மீர் 587 ரன் எடுத்தன. கடைசி நாள் முடிவில் சத்தீஸ்கர் அணி 2வது இன்னிங்சில் 276/2 ரன் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது.