ADDED : மே 03, 2024 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புரோம்ஸ்குரோவ்: இங்கிலாந்தில் 'செகண்ட் லெவன் சாம்பியன்ஷிப்' கிரிக்கெட் தொடர் (4 நாள் போட்டி) நடக்கிறது. இதில் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக பங்கேற்றார் ஜோஷ் பேக்கர் 20. சாமர்செட் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் (3வது நாள்) சுழலில் அசத்திய பேக்கர், 3 விக்கெட் சாய்த்தார். பின் தனது வீட்டிற்கு திரும்பினார். மறுநாள் போட்டிக்கு வரவில்லை. இதையடுத்து இவரது நண்பர், வீட்டுக்கு சென்று பார்த்த போது, அறையில் பேக்கர் இறந்து கிடந்தார்.
மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. அறையில் சந்தேகத்துக்கு இடமாக எதுவும் இல்லை என்பதால் போலீசார் விசாரணையை கைவிட்டனர். இறப்பதற்கு கடைசி சில மணி நேரத்துக்கு முன் பேக்கர், 3 விக்கெட் கைப்பற்றிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.