/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கமிந்து மெண்டிஸ் சாதனை சதம்: இலங்கை அணி ரன் குவிப்பு
/
கமிந்து மெண்டிஸ் சாதனை சதம்: இலங்கை அணி ரன் குவிப்பு
கமிந்து மெண்டிஸ் சாதனை சதம்: இலங்கை அணி ரன் குவிப்பு
கமிந்து மெண்டிஸ் சாதனை சதம்: இலங்கை அணி ரன் குவிப்பு
ADDED : செப் 27, 2024 10:03 PM

காலே: டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலிய ஜம்பவான் பிராட்மேனை போல ரன் மழை பொழிகிறார் கமிந்து மெண்டிஸ். இவரது சதம் கைகொடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 602 ரன் குவித்தது.
இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 306/3 ரன் எடுத்திருந்தது. மாத்யூஸ் (78), கமிந்து (51) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் நான்காவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது பிலிப்ஸ் பந்தில் மாத்யூஸ் (88) அவுட்டானார். கேப்டன் தனஞ்செயா டி சில்வா (44) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த கமிந்து மெண்டிஸ், குசால் மெண்டிஸ் ஜோடி, நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் குவித்தது. கமிந்து, டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். மறுபக்கம் குசால் மெண்டிஸ், தன்பங்கிற்கு சதம் கடந்தார்.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 602 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. கமிந்து (182*), குசால் (106*) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லதாம் (2), கான்வே (9) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 22/2 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் (6) அவுட்டாகாமல் இருந்தார்.