தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி

லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி

லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி


ADDED : ஜூன் 04, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 140 ரன் எடுத்தது. நியூசிலாந்தின் ஜேமிசன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நேற்று, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் துவங்கியது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு எமிலியோ (8) ஏமாற்றினார். இங்கிலாந்து அணி 10 ஓவரில், 24/1 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. மழை நின்ற பின், மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. நாதன் ஸ்மித் பந்தில் பென் டக்கெட் (19) அவுட்டானார். வில் ஓ'ரூர்க் 'வேகத்தில்' ஜேக்கப் பெத்தெல் (6), ஜோ ரூட் (1) வெளியேறினர். கைல் ஜேமிசன் பந்தில் ஜேமி ஸ்மித் (1), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (12) ஆட்டமிழந்தனர். பொறுப்பாக ஆடிய ஹாரி புரூக், ஜேமிசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். ஜேமிசன் பந்தில் அட்கின்சன் (4) அவுட்டானார். நாதன் ஸ்மித் பந்தில் புரூக் (56) அவுட்டானார்.

ராபின்சன் (1), பஷிர் (14) ஏமாற்றினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 140 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். கேப்டன் டாம் லதாம் (3), கான்வே (1), கேன் வில்லியம்சன் (0), ரச்சின் ரவிந்திரா (0) ஏமாற்றினர். நியூசிலாந்து அணி 9.3 ஓவரில் 20/4 ரன் எடுத்திருந்தது.இங்கிலாந்து சார்பில் ராபின்சன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us