தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கவுன்டி அணியில் மானவ் சுதார்

கவுன்டி அணியில் மானவ் சுதார்

கவுன்டி அணியில் மானவ் சுதார்

1


ADDED : ஜூன் 10, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : ஜூன் 10, 2026 09:41 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: இங்கிலாந்து கவுன்டி அணியில் இந்தியாவின் மானவ் சுதார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில், கவுன்டி சாம்பியன்ஷிப் ('டிவிசன்-1') தொடர் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள வார்விக் ஷைர் அணியில் இளம் இந்திய சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதார் 23, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் புதிய சண்டிகரில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான மாவன் சுதார், இரு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் 6/33 விக்கெட் சாய்த்த இவர், ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இதுவரை 29 முதல் தர போட்டியில், 129 விக்கெட் கைப்பற்றிய மானவ் சுதார், வார்விக் ஷைர் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளார். இதில், யார்க் ஷைர் (ஜூன் 12-15, இடம்: ஸ்கார்பரோ), சாமர்செட் (ஜூன் 19-22, இடம்: டான்டன்) அணிகளுக்கு எதிராக களமிறங்க உள்ளார்.

மானவ் சுதார் கூறுகையில், ''கவுன்டி போட்டியில் வார்விக் ஷைர் அணிக்காக விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்த அணியின் வெற்றிக்கு போராடுவேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us