/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மாஸ்டர்ஸ் லீக்: சச்சின் பங்கேற்பு
/
மாஸ்டர்ஸ் லீக்: சச்சின் பங்கேற்பு
UPDATED : செப் 30, 2024 09:42 PM
ADDED : செப் 29, 2024 10:58 PM

மும்பை: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இந்தியாவின் சச்சின் பங்கேற்க உள்ளார்.
இந்தியாவில், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்.,) முதல் சீசன் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என 6 நாடுகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் மும்பை, லக்னோ, ராய்பூர் என மூன்று இடங்களில் நடக்கவுள்ளன.
இத்தொடரின் கமிஷனராக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர இந்தியாவின் சச்சின் பங்கேற்கிறார். இதுகுறித்து சச்சின் கூறுகையில், ''விளையாட்டு நட்சத்திரங்கள் மனதளவில் ஓய்வு பெற மாட்டார்கள். மீண்டும் களத்தில் இறங்குவதற்கான வாய்ப்பை நோக்கி காத்திருப்பர். இத்தொடர், ஆர்வமுள்ள ரசிகர்களும், துடிப்பான வீரர்களும் சந்திக்கும் இடமாக கருதுகிறேன்,'' என்றார்.
கவாஸ்கர் கூறுகையில், ''மாஸ்டர்ஸ் லீக் தொடர் மூலம் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த ஓய்வு பெற்ற வீரர்களின் விளையாட்டை மீண்டும் பார்ப்பதற்கு பொன்னான வாய்ப்பாக அமையும்,'' என்றார்.