ADDED : ஆக 24, 2026 11:39 PM

சென்னை: டி.என்.பி.எல்., 'எலிமினேட்டர்' போட்டி மழையால் பாதியில் ரத்தானது.
டி.என்.பி.எல்., கிரிக்கெட் 10வது சீசன் நடக்கிறது. இதன் பைனலுக்கு மதுரை அணி முன்னேறியது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில், புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த கோவை, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோவை அணி கேப்டன் ஷாருக்கான் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
திருப்பூர் அணி 3 ஓவரில், 15/0 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நீடித்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. சாத்விக் (11), கேப்டன் ரஹேஜா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
இதனையடுத்து, புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்த கோவை அணி, தகுதிச் சுற்று-2 போட்டிக்கு (ஆக. 26) முன்னேறியது. இதில், திருச்சி அணியை சந்திக்கிறது. திருப்பூர் அணி வெளியேறியது. பைனல், ஆக. 28ல் நடக்கவுள்ளது.
