/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மழையால் போட்டி ரத்து: வெளியேறியது கோல்கட்டா
/
மழையால் போட்டி ரத்து: வெளியேறியது கோல்கட்டா
ADDED : மே 17, 2025 10:58 PM

பெங்களூரு: பெங்களூரு, கோல்கட்டா அணிகளுக்கு இடையிலான பிரிமியர் லீக் போட்டி மழையால்ரத்தானது.
இந்தியாவில், பிரிமியர் லீக் 18வது சீசன் நடக்கிறது. போர் பதட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் மீண்டும் துவங்கின. பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்த லீக் போட்டியில் பெங்களூரு, 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் விளையாட இருந்தன.
ஆனால் கனமழையால் போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது.தொடர்ந்து மழை பெய்ததால், போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. பெங்களூரு அணி 17 புள்ளிகளுடன் 'பிளே-ஆப்' வாய்ப்பைஅதிகப்படுத்திக் கொண்டது.12 போட்டியில் 12 புள்ளி பெற்றகோல்கட்டா அணி,'பிளே-ஆப்'வாய்ப்பை இழந்தது.