தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மீண்டும் வருகிறார் மேவெதர்

மீண்டும் வருகிறார் மேவெதர்

மீண்டும் வருகிறார் மேவெதர்


ADDED : பிப் 21, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாய்டு மேவெதர் 49. தொழில்ரீதியிலான அரங்கில் பங்கேற்ற 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். 27 முறை எதிரணி வீரரை 'நாக் அவுட்' முறையில் வீழ்த்தினார்.

கடந்த 2015ல் அமெரிக்காவில் நடந்த உலகின் அதிகமான பரிசுத் தொகை கொண்ட போட்டியில், பாக்குயாவோவை (பிலிப்பைன்ஸ்) வீழ்த்தினார். 2007, 2015, 2017 என மூன்று முறை ஓய்வு அறிவித்தார்.

ஐந்து முறை உலக சாம்பியன் ஆன மேவெதர், விரைவில் உலக முன்னாள் 'ஹெவிவெயிட்' சாம்பியன் மைக் டைசனுக்கு (அமெரிக்கா) எதிராக, நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளார். இதன் பின் மீண்டும் சர்வதேச அரங்கிற்கு திரும்ப உள்ளதாக மேவெதர் தெரிவித்துள்ளார்.

வீனஸ் வில்லியம்ஸ் 'ரெடி'

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் (மார்ச் 4-15) நடக்கவுள்ளது. இதன் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் விளையாட அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்சிற்கு 45, 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இவர், 10வது முறையாக இத்தொடரில் பங்கேற்க தயாராக உள்ளார்.

எக்ஸ்டிராஸ்

* சண்டிகரில், இந்திய ஓபன் நடை போட்டி நடக்கிறது. இதன் 42 கி.மீ., மாரத்தான் ஓட்டத்தில் உ.பி., வீரர் ராம் பாபு (3 மணி நேரம், 9 நிமிடம், 17 வினாடி), பஞ்சாப் வீராங்கனை மஞ்சு (3 மணி நேரம், 33 நிமிடம், 24 வினாடி) தங்கம் வென்றனர்.

* டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சித்தாந்த் பந்தியா, பல்கேரியாவின் டான்ஸ்கி ஜோடி 4-6, 6-4, 12-10 என, இந்தியாவின் நிக்கி பூனாச்சா, தாய்லாந்தின் இசாரோ ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

* துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் ஜோடி 6-4, 7-6 என, சகநாட்டை சேர்ந்த அனிருத் சந்திரசேகர், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us