sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

12 ரன்னுக்கு சுருண்டது மங்கோலியா: ஜப்பான் அணி அசத்தல்

/

12 ரன்னுக்கு சுருண்டது மங்கோலியா: ஜப்பான் அணி அசத்தல்

12 ரன்னுக்கு சுருண்டது மங்கோலியா: ஜப்பான் அணி அசத்தல்

12 ரன்னுக்கு சுருண்டது மங்கோலியா: ஜப்பான் அணி அசத்தல்


ADDED : மே 08, 2024 10:41 PM

Google News

ADDED : மே 08, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சனோ: ஜப்பானுக்கு எதிரான 'டி-20' போட்டியில் ஏமாற்றிய மங்கோலிய அணி 12 ரன்னுக்கு சுருண்டது.

ஜப்பான் சென்றுள்ள மங்கோலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஜப்பான் வென்றது. சனோவில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஜப்பான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன் எடுத்தது. சபோரிஷ் ரவிச்சந்திரன் 69 ரன் விளாசினார்.

சவாலான இலக்கை விரட்டிய மங்கோலிய அணி 8.2 ஓவரில் 12 ரன்னுக்கு சுருண்டு, 205 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மங்கோலியா சார்பில் துர் சும்ரா அதிகபட்சமாக 4 ரன் எடுத்தார். ஆறு பேர் 'டக்-அவுட்' ஆகினர். ஜப்பான் சார்பில் 'வேகத்தில்' மிரட்டிய கசுமா கடோ-ஸ்டாபோர்டு 5 விக்கெட் சாய்த்தார்.

இதன்மூலம் சர்வதேச 'டி-20' அரங்கில் ஒரு இன்னிங்சில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடம் பிடித்தது மங்கோலியா. முதலிடத்தில் இசல் ஆப் மேன் அணி (10 ரன், எதிர்: ஸ்பெயின், 2023) உள்ளது.

இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us