/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மும்பை-விதர்பா மோதல்: ரஞ்சி கோப்பை அரையிறுதியில்
/
மும்பை-விதர்பா மோதல்: ரஞ்சி கோப்பை அரையிறுதியில்
ADDED : பிப் 16, 2025 10:01 PM

நாக்பூர்: ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மும்பை, விதர்பா அணிகள் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. நாக்பூரில் இன்று துவங்கும் காலிறுதியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, விதர்பாவை எதிர்கொள்கிறது.
ஜெய்ஸ்வால் விலகல்: லீக் சுற்றில் 29 புள்ளிகளுடன் (4 வெற்றி, ஒரு 'டிரா', 2 தோல்வி) 'ஏ' பிரிவில் 2வது இடம் பிடித்த மும்பை அணி, காலிறுதியில் ஹரியானாவை வீழ்த்தியது. மும்பை அணியில் கேப்டன் அஜின்கியா ரகானே, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஷர்துல் தாகூர் என நட்சத்திர வீரர்கள் இருப்பது பலம். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரராக இடம் பெற்றுள்ள துவக்க வீரர் ஜெய்ஸ்வால், காயத்தால் இப்போட்டியில் விளையாடமாட்டார்.
பேட்டிங்கில் சித்தேஷ் லத் (565 ரன்), ஆயுஷ் மத்ரே (444), ஷாம்ஸ் முலானி (315), தனுஷ் (255) நம்பிக்கை தருகின்றனர். பவுலிங்கில் முலானி (36 விக்கெட்), ஷர்துல் (33) கைகொடுத்தால் சுலப வெற்றி பெறலாம்.
கருண் நம்பிக்கை: லீக் சுற்றில் 40 புள்ளிகளுடன் (6 வெற்றி, ஒரு 'டிரா') 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த விதர்பா அணி, காலிறுதியில் தமிழகத்தை வென்றது. பேட்டிங்கில் யாஷ் ரத்தோட் (728 ரன்), கருண் நாயர் (591), கேப்டன் அக்சய் வாட்கர் (588) பலம் சேர்க்கின்றனர். 'சுழலில்' ஹர்ஷ் துபே அசத்துகிறார். இம்முறை அதிகபட்சமாக 59 விக்கெட் சாய்த்துள்ள இவருக்கு, ஆதித்யா தாக்கரே (28 விக்கெட்), அக்சய் வாட்கர் (27) ஒத்துழைப்பு தந்தால் மும்பை பேட்டர்களுக்கு நெருக்கடி தரலாம்.
ஆமதாபாத்தில் இன்று துவங்கும் மற்றொரு அரையிறுதியில் குரஜாத், கேரளா அணிகள் மோதுகின்றன.

