/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கவாஸ்கர், காம்ப்ளிக்கு பாராட்டு: மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில்
/
கவாஸ்கர், காம்ப்ளிக்கு பாராட்டு: மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில்
கவாஸ்கர், காம்ப்ளிக்கு பாராட்டு: மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில்
கவாஸ்கர், காம்ப்ளிக்கு பாராட்டு: மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில்
ADDED : ஜன 12, 2025 11:10 PM

மும்பை: மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானம், 1974ல் திறக்கப்பட்டது. இதன் 50வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, மும்பை அணியின் முன்னாள் வீரர்களுக்கு, மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மும்பை அணியின் முதல் கேப்டனான கவாஸ்கர், வினோத் காம்ப்ளி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், வாசிம் ஜாபர், ராஜு குல்கர்னி, சந்திரகாந்த் பண்டித், லால்சந்த் ராஜ்புட், சோபா பண்டித், அருந்ததி கோஷ் ஆகியோருக்கு எம்.சி.ஏ., தலைவர் அஜின்கியா நாயக் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முன்னாள் எம்.சி.ஏ., தலைவர் விஜய் பாட்டீலுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், ''மும்பை, வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. இங்கு விளையாடியதை என்றும் மறக்க முடியாது,'' என்றார்.
வினோத் காம்ப்ளி கூறுகையில், ''இங்கிலாந்துக்கு எதிராக இங்கு, எனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தேன். அதன்பின் எனது கிரிக்கெட் வாழ்வில் நிறைய சதம் அடித்தேன்,'' என்றார்.