/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தோள் கொடுப்பாரா தோழன் ரோகித் * ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை
/
தோள் கொடுப்பாரா தோழன் ரோகித் * ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை
தோள் கொடுப்பாரா தோழன் ரோகித் * ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை
தோள் கொடுப்பாரா தோழன் ரோகித் * ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை
ADDED : மார் 18, 2024 11:04 PM

மும்பை: ''ஐ.பி.எல்., தொடரில் ரோகித், எனக்கு வழிகாட்டியாக இருப்பார்,'' என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, ஐந்து கோப்பை வென்று தந்தார். வரும் சீசனில் மும்பை அணி நிர்வாகம், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமித்தது. இதனால் சூர்யகுமார், பும்ரா உள்ளிட்டோர், பாண்ட்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை, அணியில் குழப்பம் நிலவுவதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து பாண்ட்யா கூறியது:
ரோகித் சர்மா கேப்டனாக இல்லாமல் இருப்பது, மும்பை அணியில் எவ்வித வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எனக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும், அங்கு ரோகித் இருப்பார். ரோகித் தலைமையில் மும்பை அணி பல்வேறு சாதனை படைத்துள்ளது. அதை அப்படியே முன்னெடுத்து செல்லப் போகிறேன். இவ்விஷயத்தில் அவர் எனக்கு, தோள் கொடுக்கும் தோழனாக இருப்பார்.
என்னால் கட்டுப்படுத்தக் கூடிய விஷயங்களில் நான் கவனம் செலுத்துகிறேன். மற்றபடி கேப்டன் மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்க ஒவ்வொரு ரசிகருக்கும் உரிமை உள்ளது. இதை நான் மதிக்கிறேன்.
மும்பை அணியை பொறுத்தவரையில் எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இதை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கையில் ஈடுபடுவோம். இதை ஒரே நாளில் செய்து விட முடியாது. இருமாதம் பொறுத்திருங்கள். எப்படி தயாராகிறோம், எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

