/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மும்பை அணி சாம்பியன்: சீனியர் பெண்கள் 'டி-20' போட்டியில்
/
மும்பை அணி சாம்பியன்: சீனியர் பெண்கள் 'டி-20' போட்டியில்
மும்பை அணி சாம்பியன்: சீனியர் பெண்கள் 'டி-20' போட்டியில்
மும்பை அணி சாம்பியன்: சீனியர் பெண்கள் 'டி-20' போட்டியில்
ADDED : நவ 12, 2024 10:45 PM

மும்பை: சீனியர் பெண்களுக்கான 'டி-20' தொடரில் மும்பை அணி கோப்பை வென்றது.
மும்பையில் நடந்த சீனியர் பெண்கள் 'டி-20' கோப்பை 16வது சீசனுக்கான பைனலில் மும்பை, பெங்கால் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பெங்கால் அணிக்கு தாரா குஜ்ஜர் (26), ஹ்ரிஷிதா பாசு (18), டைடாஸ் சாது (17) ஆறுதல் தந்தனர். 20 ஓவரில் 85 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மும்பை சார்பில் ஜாக்ரவி பவார் 3, சவுமியா சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு ஹுமைரா காஸி (41*), விருஷாலி பகத் (45*) கைகொடுத்தனர். 12.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 86 ரன் எடுத்து வெற்றி பெற்று, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது. இத்தொடரில் இரண்டாவது முறையாக (2023, 2024) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மும்பை அணி, ரயில்வே அணிக்கு பின் தொடர்ச்சியாக 2 முறை கோப்பை வென்ற அணியானது. ரயில்வே அணி, இதுவரை 11 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.