ADDED : ஆக 07, 2026 11:01 PM

நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.
நத்தத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லை, திண்டுக்கல் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
திண்டுக்கல் அணிக்கு அனுராக் ராஜேஷ் நாயர், விமல் குமார் ஜோடி கைகொடுத்தது. சோனு யாதவ் 'வேகத்தில்' அனுராக் (35) வெளியேறினார். அபாரமாக ஆடிய விமல் குமார், 35 பந்தில் அரைசதம் எட்டினார். ஹன்னி சைனி (27) ஆறுதல் தந்தார். விமல் குமார் 63 ரன்னில் (3X6, 5X4) ஆட்டமிழந்தார்.
திண்டுக்கல் அணி 20 ஓவரில் 170/7 ரன் எடுத்தது. புவனேஸ்வரன் (9), மோகித் (3) அவுட்டாகாமல் இருந்தனர். நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு சந்தோஷ் குமார் (44) நல்ல துவக்கம் கொடுத்தார். குருசாமி அஜிதேஷ் (46), முகிலேஷ் (43*) ஜோடி நம்பிக்கை அளித்தது. சக்தி பந்தில் வரிசையாக 2 சிக்சர் விளாசிய கேப்டன் சோனு யாதவ் (19*) வெற்றியை உறுதி செய்தார்.
நெல்லை அணி 17.4 ஓவரில் 172/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
