sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

நெல்லை அணி 'திரில்' வெற்றி: ராஜகோபால் அரைசதம் விளாசல்

/

நெல்லை அணி 'திரில்' வெற்றி: ராஜகோபால் அரைசதம் விளாசல்

நெல்லை அணி 'திரில்' வெற்றி: ராஜகோபால் அரைசதம் விளாசல்

நெல்லை அணி 'திரில்' வெற்றி: ராஜகோபால் அரைசதம் விளாசல்


UPDATED : ஜூலை 08, 2024 12:03 AM

ADDED : ஜூலை 08, 2024 12:01 AM

Google News

UPDATED : ஜூலை 08, 2024 12:03 AM ADDED : ஜூலை 08, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பரபரப்பான கடைசி ஓவரில் ராஜகோபால் 20 ரன் விளாச, நெல்லை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல்., தொடரின் 8வது சீசன் சேலத்தில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் நெல்லை, சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி, 'பவுலிங்' தேர்வு செய்தது.

ஜெகதீசன் அரைசதம்: சேப்பாக்கம் அணிக்கு சந்தோஷ் குமார் (41), ஜெகதீசன் நல்ல துவக்கம் கொடுத்தனர். கேப்டன் பாபா அபராஜித் (24), சித்தார்த் (17) ஓரளவு கைகொடுத்தனர். ஜெகதீசன் (63 ரன்*, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் கடந்தார். சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்தது. நெல்லை சார்பில் ரகுபதி சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் (10) விரைவில் அவுட்டானார். குருசாமி அஜிதேஷ், 30 ரன் எடுத்தார். மோகித் ஹரிஹரன் (52 ரன், 5 பவுண்டரி, 1 சிக்சர்) அரைசதம் கடந்தார்

'திரில்' வெற்றி: கடைசி ஓவரில் நெல்லை வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டன. அஸ்வின் கிறிஸ்ட் பந்துவீசினார். முதல் பந்து 'வைடு' ஆனது. மீண்டும் வீசய இந்த பந்தில் ரன் கிடைக்கவில்லை. பின் வீசிய 4 பந்தில் 20 ரன் (4, 6, 6, 4) விளாசிய ராஜகோபால், 'திரில்' வெற்றி தேடித் தந்தார். நெல்லை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ராஜகோபால் (53 ரன், 3 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.

சேப்பாக்கம் சார்பில் டேரில் பெராரியோ 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் விருதை ராஜகோபால் வென்றார்.






      Dinamalar
      Follow us