/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்: கிர்ஸ்டன், கில்லஸ்பி நியமனம்
/
பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்: கிர்ஸ்டன், கில்லஸ்பி நியமனம்
பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்: கிர்ஸ்டன், கில்லஸ்பி நியமனம்
பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்: கிர்ஸ்டன், கில்லஸ்பி நியமனம்
ADDED : ஏப் 28, 2024 11:25 PM

லாகூர்: பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர்களாக கேரி கிர்ஸ்டன், கில்லஸ்பி நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் (50 ஓவர், 2023) பாகிஸ்தான் அணி சொதப்பியது. இதையடுத்து தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், அணி இயக்குநர் மிக்கி ஆர்தர், கேப்டன் பாபர் ஆசம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். புதிய கேப்டனாக ஷாகீன் ஷா அப்ரிதி ('டி-20', ஒருநாள் போட்டி) நியமிக்கப்பட்டார். கடந்த மார்ச்சில் ஷாகீன் ஷா அப்ரிதி நீக்கப்பட்டு, மீண்டும் கேப்டன் ஆனார் பாபர் ஆசம். டெஸ்ட் அணி கேப்டனாக ஷான் மசூது தொடர்கிறார்.
வரும் 'டி-20' உலக கோப்பை தொடரை (ஜூன் 1-29) கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியின் 'டி-20', ஒருநாள் போட்டிக்கான புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் முன்னாள் பேட்டர் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக (2008-2011) இருந்தவர் கிர்ஸ்டன். இவரது பயிற்சியில் இந்திய அணி உலக கோப்பை (2011, 50 ஓவர்) வென்றது. டெஸ்ட் அரங்கில் 'நம்பர்-1' இடத்தையும் பெற்றது.
தற்போது ஐ.பி.எல்., தொடரில் குஜராத் அணியின் ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார் கிர்ஸ்டன். வரும் மே 22ல் இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி, நான்கு 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பயணத்தை கிர்ஸ்டன் துவங்க உள்ளார்.
அசார் முகமது வாய்ப்பு
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் 'வேகப்புயல்' கில்லஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் சசக்ஸ் கவுன்டி அணியின் பயிற்சியாளராக இருந்த அனுபவம் இவருக்கு உதவும். மூன்றுவித கிரிக்கெட்டுக்கும் துணை பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' அசார் முகமது செயல்படுவார். அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

