/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
புதிய பயிற்சியாளர் பாண்டிங்: ஐ.பி.எல்., பஞ்சாப் அணிக்கு நியமனம்
/
புதிய பயிற்சியாளர் பாண்டிங்: ஐ.பி.எல்., பஞ்சாப் அணிக்கு நியமனம்
புதிய பயிற்சியாளர் பாண்டிங்: ஐ.பி.எல்., பஞ்சாப் அணிக்கு நியமனம்
புதிய பயிற்சியாளர் பாண்டிங்: ஐ.பி.எல்., பஞ்சாப் அணிக்கு நியமனம்
ADDED : செப் 18, 2024 10:22 PM

புதுடில்லி: ஐ.பி.எல்., பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் இடம் பெற்றுள்ள பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் டிரிவர் பேலிஸ் இருந்தார். இவரது பயிற்சியின் கீழ் பஞ்சாப் அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு உலக கோப்பை (2003, 2007) பெற்றுத்தந்த பாண்டிங், ஐ.பி.எல்., தொடரில் மும்பை (2014-16), டில்லி (2018-2024) அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் டில்லி அணி சோபிக்காததால், சமீபத்தில் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து பாண்டிங் கூறுகையில், ''பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதன்மூலம் புதிய சவாலை ஏற்க இருப்பது மகிழ்ச்சி. அணியில் திறமையான வீரர்கள் நிறைய உள்ளனர். அடுத்த சீசனில் வித்தியாசமான பஞ்சாப் அணியை ரசிகர்கள் காணலாம். அணியின் முன்னேற்றத்திற்கு சகவீரர்களுடன் இணைந்து போராடுவேன்,'' என்றார்.