/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது நியூயார்க்: மேஜர் லீக் கிரிக்கெட்டில்
/
கோப்பை வென்றது நியூயார்க்: மேஜர் லீக் கிரிக்கெட்டில்
கோப்பை வென்றது நியூயார்க்: மேஜர் லீக் கிரிக்கெட்டில்
கோப்பை வென்றது நியூயார்க்: மேஜர் லீக் கிரிக்கெட்டில்
ADDED : ஜூலை 14, 2025 10:48 PM

டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நியூயார்க் அணி கோப்பை வென்றது. பைனலில், 5 ரன் வித்தியாசத்தில் வாஷிங்டன் அணியை வென்றது.
அமெரிக்காவில், உள்ளூர் அணிகள் பங்கேற்ற மேஜர் லீக் கிரிக்கெட் ('டி-20') 3வது சீசன் நடந்தது. டல்லாசில் நடந்த பைனலில் நியூயார்க், வாஷிங்டன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வாஷிங்டன் அணி கேப்டன் மேக்ஸ்வெல், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
நியூயார்க் அணிக்கு குயின்டன் டி காக் (77) நம்பிக்கை தந்தார். மோனக் படேல் (28), கேப்டன் நிக்கோலஸ் பூரன் (21), குன்வர்ஜீத் சிங் (22*) ஓரளவு கைகொடுக்க, நியூயார்க் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய வாஷிங்டன் அணிக்கு ரச்சின் ரவிந்திரா (70) கைகொடுத்தார். ஜாக் எட்வர்ட்ஸ் (33) ஆறுதல் தந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன. ருஷில் உகார்கர் பந்துவீசினார். முதல் மூன்று பந்தில், 2 ரன் எடுத்த மேக்ஸ்வெல் (15), 4வது பந்தில் அவுட்டானார். கடைசி 2 பந்தில், 4 ரன் மட்டும் கிடைத்தது.
வாஷிங்டன் அணி 20 ஓவரில் 175/5 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்து, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைக்க தவறியது. பிலிப்ஸ் (48) அவுட்டாகாமல் இருந்தார். நியூயார்க் அணி 2வது முறையாக (2023, 2025) கோப்பை வென்றது.