/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்: ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு
/
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்: ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்: ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்: ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு
ADDED : டிச 18, 2024 09:57 PM

ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக சான்ட்னர் நியமிக்கப்பட்டார்.
நியூசிலாந்து ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்தார். கடந்த ஜூன் மாதம் நடந்த 'டி-20' உலக கோப்பைக்கு பின் பதவி விலகினார்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு புதிய கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 30 டெஸ்ட் (74 விக்கெட்), 107 ஒருநாள் (108 விக்கெட்), 106 சர்வதேச 'டி-20' (117 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ள சான்ட்னர், ஏற்கனவே 24 'டி-20', 4 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். தவிர இவர், அடுத்து நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான 'டி-20' (டிச. 28, 30, ஜன. 2), ஒருநாள் (ஜன. 5, 8, 11) தொடரில் இருந்து கேப்டனாக செயல்படுவார். சமீபத்தில் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, இலங்கை மண்ணில் 'டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
கடந்த 2020ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 'டி-20' போட்டியில் முதன்முறையாக கேப்டனாக களமிறங்கிய சான்ட்னர், 2022ல் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வழிநடத்தினார்.
சான்ட்னர் கூறுகையில், ''இளம் வயதில் நியூசிலாந்துக்காக விளையாட விரும்பினேன். தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டது கூடுதல் சிறப்பு. இதனை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்,'' என்றார்.