/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அரையிறுதியில் நியூசிலாந்து: 56 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்
/
அரையிறுதியில் நியூசிலாந்து: 56 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்
அரையிறுதியில் நியூசிலாந்து: 56 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்
அரையிறுதியில் நியூசிலாந்து: 56 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்
ADDED : அக் 14, 2024 10:34 PM

துபாய்: 'டி-20' உலக கோப்பை அரையிறுதிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 54 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) பெண்களுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த 'ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு ஜார்ஜியா (17), சுசி பேட்ஸ் (28) நல்ல துவக்கம் கொடுத்தனர். அமெலியா கெர் (9) ஏமாற்றினார். அடுத்து வந்த புரூக் ஹாலிடே (22), கேப்டன் சோபி டெவின் (19) கைகொடுத்தனர். மேடி கிரீன் (9) நிலைக்கவில்லை. நியூசிலாந்து அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சாந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 11.4 ஓவரில் 56 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கேப்டன் பாத்திமா சனா (21) ஆறுதல் தந்தார். நியூசிலாந்து சார்பில் அமெலியா கெர் 3 விக்கெட் வீழ்த்தினார்.