/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வடகிழக்கு யுனைடெட் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
/
வடகிழக்கு யுனைடெட் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
வடகிழக்கு யுனைடெட் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
வடகிழக்கு யுனைடெட் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
ADDED : செப் 16, 2024 10:05 PM

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி 1-0 என, முகமதியன் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில், அறிமுக முகமதியன் அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை எதிர்கொண்டது. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+4வது நிமிடம்) எழுச்சி கண்ட வடகிழக்கு யுனைடெட் அணிக்கு அலாதீன் அஜாரை ஒரு கோல் அடித்தார். இதற்கு முகமதியன் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.