தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் * கிரிக்கெட்டில் பங்கேற்க தகுதி

ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் * கிரிக்கெட்டில் பங்கேற்க தகுதி

ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் * கிரிக்கெட்டில் பங்கேற்க தகுதி


ADDED : ஜூன் 29, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 2028ல் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் (1900) அடுத்து, 126 ஆண்டுக்குப் பின், ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் கிரிக்கெட் ('டி-20') இடம் பெற்றுள்ளது. இதில் ஆண்கள் (6), பெண்கள் (6) என மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன.

உலகின் 'நம்பர்-1' அணி என்ற அடிப்படையில் இந்திய ஆண்கள் அணி தகுதி பெற்றுவிட்டது. தற்போது இந்திய பெண்கள் அணியும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நடக்கும் 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. எனினும் ஆசியா, ஓசியானியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்த அணிகள் அடிப்படையில், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து என இதுவரை 4 அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us