sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

வெளியேறியது பாகிஸ்தான்: மழையால் போட்டி ரத்து

/

வெளியேறியது பாகிஸ்தான்: மழையால் போட்டி ரத்து

வெளியேறியது பாகிஸ்தான்: மழையால் போட்டி ரத்து

வெளியேறியது பாகிஸ்தான்: மழையால் போட்டி ரத்து


ADDED : ஜூன் 15, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாடர்ஹில்: அயர்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானதால் அமெரிக்க அணி 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது.

அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் நேற்று நடக்க இருந்த 'டி-20' உலக கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை, ஆடுகள ஈரப்பதம் காரணமாக போட்டி ரத்தானது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.

'ஏ' பிரிவில் 3 போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்க அணி 4 போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 5 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. இதன்மூலம் 'டி-20' உலக கோப்பையில் அறிமுகமான முதல் தொடரில் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியானது.

பாகிஸ்தான் அணி, தனது கடைசி லீக் போட்டியில் (ஜூன் 16) அயர்லாந்தை வீழ்த்தினால் கூட 4 புள்ளி மட்டும் பெறும் என்பதால் 'சூப்பர்-8' சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.






      Dinamalar
      Follow us