/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கடைசி ஓவரில் நெல்லை ஏமாற்றம்: திருப்பூர் அணியிடம் வீழ்ந்தது
/
கடைசி ஓவரில் நெல்லை ஏமாற்றம்: திருப்பூர் அணியிடம் வீழ்ந்தது
கடைசி ஓவரில் நெல்லை ஏமாற்றம்: திருப்பூர் அணியிடம் வீழ்ந்தது
கடைசி ஓவரில் நெல்லை ஏமாற்றம்: திருப்பூர் அணியிடம் வீழ்ந்தது
UPDATED : ஜூலை 24, 2024 11:01 PM
ADDED : ஜூலை 24, 2024 10:47 PM

திருநெல்வேலி: கடைசி ஓவரில் ஏமாற்றிய நெல்லை அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தமிழகத்தில் டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. திருநெல்வேலியில் நடந்த லீக் போட்டியில் நெல்லை, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் (0) ஏமாற்றினார். பின் இணைந்த துஷார் ரஹேஜா, ராதாகிருஷ்ணன் ஜோடி நம்பிக்கை தந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது சிலம்பரசன் பந்தில் ரஹேஜா (41) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ராதாகிருஷ்ணன் (50) அரைசதம் விளாசினார். பாலசந்தர் அனிருத் (14) நிலைக்கவில்லை. கேப்டன் சாய் கிஷோர் (2) சொற்ப ரன்னில் வெளியேறினார்.
பொறுப்பாக ஆடிய முகமது அலி (35), கணேஷ் (36), சிலம்பரன் பந்தில் 'பெவிலியன்' திரும்பினர். மதிவண்ணன் (1) 'ரன்-அவுட்' ஆனார். திருப்பூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 189 ரன் எடுத்தது. நெல்லை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு அஜிதேஷ் (0), நிதிஷ் ராஜகோபால் (1), அருண் குமார் (6) ஏமாற்றினர். கேப்டன் அருண் கார்த்திக் (51), சோனு யாதவ் (40), ரித்திக் ஈஸ்வரன் (59) நம்பிக்கை தந்தனர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டன. நடராஜன் பந்துவீசினார். இரண்டு சிக்சர் உட்பட 16 ரன் மட்டும் கிடைத்தது. நெல்லை அணி 20 ஓவரில் 184/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது. கோகுல்மூர்த்தி (3), சிலம்பரசன் (7) அவுட்டாகாமல் இருந்தனர். திருப்பூர் சார்பில் நடராஜன் 4 விக்கெட் சாய்த்தார்.