/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அயர்லாந்தை வென்றது பாகிஸ்தான்: ரிஸ்வான், ஜமான் அரைசதம்
/
அயர்லாந்தை வென்றது பாகிஸ்தான்: ரிஸ்வான், ஜமான் அரைசதம்
அயர்லாந்தை வென்றது பாகிஸ்தான்: ரிஸ்வான், ஜமான் அரைசதம்
அயர்லாந்தை வென்றது பாகிஸ்தான்: ரிஸ்வான், ஜமான் அரைசதம்
ADDED : மே 13, 2024 10:50 PM

டப்ளின்: இரண்டாவது 'டி-20' போட்டியில் ரிஸ்வான், பகார் ஜமான் அரைசதம் கடந்து கைகொடுக்க பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அயர்லாந்து வென்றது. இரண்டாவது போட்டி டப்ளினில் நடந்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
அயர்லாந்து அணிக்கு பால்பிர்னி (16), கேப்டன் பால் ஸ்டிர்லிங் (11) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. லார்கன் டக்கர் (51) அரைசதம் கடந்தார். ஹாரி டெக்டர் (32), கர்டிஸ் கேம்பர் (22), கரேத் டெலானி (28*) ஓரளவு கைகொடுத்தனர். அயர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 3 விக்கெட் சாய்த்தார்.
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசம் (0) ஏமாற்றினார். பின் இணைந்த முகமது ரிஸ்வான் (75*), பகார் ஜமான் (78) ஜோடி நம்பிக்கை தந்தது. மார்க் அடேர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஆசம் கான் வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 16.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
தொடர் 1-1 என சமநிலை அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை ரிஸ்வான் வென்றார்.