/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மீண்டது பாகிஸ்தான்: அயூப், ஷகீல் அரைசதம்
/
மீண்டது பாகிஸ்தான்: அயூப், ஷகீல் அரைசதம்
ADDED : ஆக 21, 2024 10:42 PM

ராவல்பிண்டி: சைம் அயூப், சவுத் ஷகீல் அரைசதம் விளாச பாகிஸ்தான் அணி சரிவிலிருந்து மீண்டது.
பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற வங்கதேசம் 'பீல்டிங்' தேர்வு செய்தது. மழையால் போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது.
பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபீக் (2), கேப்டன் ஷான் மசூது (6) ஏமாற்றினர். பாபர் ஆசம் 'டக்-அவுட்' ஆனார். பாகிஸ்தான் அணி 16 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின் இணைந்த சைம் அயூப், சவுத் ஷகீல் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. நிதானமாக ஆடிய அயூப், 76 பந்தில் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த போது ஹசன் மஹ்மூத் பந்தில் அயூப் (56) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஷகீல், 83 பந்தில் அரைசதம் அடித்தார்.
முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்திருந்தது. ஷகீல் (57), முகமது ரிஸ்வான் (24) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.