/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'பாலோ-ஆன்' பெற்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்கா அசத்தல்
/
'பாலோ-ஆன்' பெற்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்கா அசத்தல்
'பாலோ-ஆன்' பெற்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்கா அசத்தல்
'பாலோ-ஆன்' பெற்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்கா அசத்தல்
ADDED : ஜன 05, 2025 10:27 PM

கேப்டவுன்: முதல் இன்னிங்சில் 194 ரன்னுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி 'பாலோ-ஆன்' பெற்றது.
தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 615 ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 64/3 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாபர் ஆசம் (58), முகமது ரிஸ்வான் (46) நம்பிக்கை அளித்தனர். மற்றவர்கள் ஏமாற்ற பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 194 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட் சாய்த்தார்.
'பாலோ-ஆன்' பெற்று 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம் (81) கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 213/1 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஷான் மசூது (102), குர்ராம் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.