sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: டெஸ்ட் தொடர் சமன்

/

வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: டெஸ்ட் தொடர் சமன்

வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: டெஸ்ட் தொடர் சமன்

வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: டெஸ்ட் தொடர் சமன்


ADDED : ஜன 27, 2025 10:15 PM

Google News

ADDED : ஜன 27, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முல்தான்: இரண்டாவது டெஸ்டில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 120 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடர் 1-1 என சமன் ஆனது. இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் முல்தானில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 163, பாகிஸ்தான் 154 ரன் எடுத்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 244 ரன் எடுத்தது. பின், 254 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, 2ம் நாள் முடிவில் 76/4 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு இன்னும் 178 ரன் தேவைப்பட்ட நிலையில், 2வது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் 'சுழலில்' தடுமாறியது. கெவின் சின்க்ளேர் பந்தில் சவுத் ஷகீல் (13) அவுட்டானார். ஜோமல் வாரிக்கன் 'சுழலில்' காஷிப் அலி (1), சல்மான் ஆகா (15), முகமது ரிஸ்வான் (25) சிக்கினர். தொடர்ந்து அசத்திய வாரிக்கன் பந்தில் சஜித் கான் (7) அவுட்டானார்.

பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 133 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வாரிக்கன் 5, சின்க்ளேர் 3, குடகேஷ் 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் (19 விக்கெட், 85 ரன்) விருதுகளை வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன் தட்டிச் சென்றார்.

34 ஆண்டுகளுக்கு பின்...

வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் மண்ணில் 34 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் வெற்றி பெற்றது. கடைசியாக 1990, நவ. 23-25ல் பைசலாபாத்தில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.



19 விக்கெட்

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை ஷேன் ஷில்லிங்போர்டு (எதிர்: ஜிம்பாப்வே, 2013), குடகேஷ் மோதியுடன் (எதிர்: ஜிம்பாப்வே) பகிர்ந்து கொண்டார் ஜோமல் வாரிக்கன். இவர்கள் மூவரும் தலா 19 விக்கெட் சாய்த்தனர்.

* பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் வாரிக்கன். முதலிரண்டு இடங்களில் இலங்கையின் ஹெராத் (23 விக்கெட், 2014), இந்தியாவின் கும்ளே (21 விக்கெட், 1999) உள்ளனர்.

1190 பந்து

முல்தானில் நடந்த 2வது டெஸ்ட், இரு அணிகளின் 40 விக்கெட் சரிந்து, குறைந்த பந்தில் (1190) முடிந்த 3வது டெஸ்ட் ஆனது. சமீபத்தில் முல்தானில் நடந்த முதல் டெஸ்ட் 1064 பந்தில் முடிந்து, இப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய லார்ட்ஸ் டெஸ்ட் (1053 பந்து, 2019) உள்ளது.

'பயோ-டேட்டா'

பெயர்: ஜோமல் வாரிக்கன்

பிறந்த நாள்: 20-05-1992

பிறந்த இடம்: ரிச்மண்ட் ஹில், செயின்ட் வின்சென்ட்

'ரோல்': இடது கை சுழற்பந்துவீச்சாளர்

டெஸ்ட் அறிமுகம்: 2015, அக். 22-26, எதிர்: இலங்கை, இடம்: கொழும்பு

டெஸ்ட் செயல்பாடு: 19 போட்டி, 73 விக்கெட்






      Dinamalar
      Follow us