/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
154 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்
/
154 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்
ADDED : ஜன 25, 2025 09:37 PM

முல்தான்: வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் பதிலடி கொடுக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 154 ரன்னுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. முல்தானில் 2வது டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (9), மிகைல் லுாயிஸ் (4) உள்ளிட்டோர் ஏமாற்றினர். கவேம் ஹாட்ஜ் (21) ஆறுதல் தந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்து திணறியது. குடகேஷ் மோதி (55) அரைசதம் கடந்தார். கீமர் ரோச் (25), ஜோமல் வாரிக்கன் (36*) ஓரளவு கைகொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 163 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 6 விக்கெட் கைப்பற்றினார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம் (1) ஏமாற்றினார். முகமது ரிஸ்வான் (49), சவுத் ஷகீல் (32) ஓரளவு கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 154 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4, குடகேஷ் மோதி 3, கீமர் ரோச் 2 விக்கெட் சாய்த்தனர்.
20 விக்கெட்முதல் நாள் ஆட்டத்தில் 20 விக்கெட் சரிந்தன. இது, பாகிஸ்தானில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச விக்கெட் ஆனது. இதற்கு முன், சமீபத்தில் முல்தானில் நடந்த முதல் டெஸ்டின் 2ம் நாள் ஆட்டத்தில் 19 விக்கெட் வீழ்ந்தது அதிகபட்சமாக இருந்தது.
'சுழல்' வேட்டை'சுழலில்' 16 விக்கெட் சரிந்தன. இது, டெஸ்ட் அரங்கில் முதல் நாள் ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட் ஆனது. இதற்கு முன் 1907ல் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மோதிய லீட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் 'சுழல்' வீரர்கள் 14 விக்கெட் சாய்த்திருந்தனர்.

