/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம்
/
கோப்பை வென்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம்
கோப்பை வென்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம்
கோப்பை வென்றது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றம்
ADDED : டிச 23, 2024 10:03 PM

ஜோகனஸ்பர்க்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், தொடரை 3-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்கா ஏமாற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்ற பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற பாகிஸ்தான் 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. மழை காரணமாக தலா 47 ஓவர் கொண்ட போட்டியாக நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் (101) நம்பிக்கை தந்தார். பாபர் ஆசம் (52), கேப்டன் முகமது ரிஸ்வான் (53) அரைசதம் விளாசினர். சல்மான் ஆகா (48) ஓரளவு கைகொடுத்தார். பாகிஸ்தான் அணி 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட் சாய்த்தார்.
பின், தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 47 ஓவரில் 308 ரன் என 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலக்கு மாற்றப்பட்டது. கேப்டன் பவுமா (8) ஏமாற்றினார். டோனி டி ஜோர்ஜி (26), வான் டெர் துசென் (35) ஆறுதல் தந்தனர். மார்க்ரம் (19) நிலைக்கவில்லை. ஹெய்ன்ரிச் கிளாசன் 81 ரன் விளாசினார். டேவிட் மில்லர் (3) சோபிக்கவில்லை. மார்கோ யான்சென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்ரிக்க அணி 42 ஓவரில் 271 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. கார்பின் (40) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் சுபியான் முகீம் 4, ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

