/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது பாகிஸ்தான்: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
/
கோப்பை வென்றது பாகிஸ்தான்: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
கோப்பை வென்றது பாகிஸ்தான்: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
கோப்பை வென்றது பாகிஸ்தான்: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
ADDED : நவ 28, 2024 09:36 PM

புலவாயோ: மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி 99 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி புலவாயோ நகரில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் குலாம் (103), அப்துல்லா ஷபிக் (50) நம்பிக்கை அளித்தனர். கேப்டன் முகமது ரிஸ்வான் (37), சைம் அயூப் (31), சல்மான் ஆகா (30) கைகொடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் கிரெய்க் எர்வின் (51), பிரைன் பென்னட் (37) ஆறுதல் தந்தனர். சீன் வில்லியம்ஸ் (24), சிக்கந்தர் ராஜா (16) தவிர மற்றவர்கள் ஏமாற்ற ஜிம்பாப்வே அணி 40.1 ஓவரில் 204 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் சைம் அயூப், அப்ரார் அகமது, ஹாரிஸ் ராப், அமீர் ஜமால் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.