/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தான் திணறல் ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரம்
/
பாகிஸ்தான் திணறல் ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரம்
பாகிஸ்தான் திணறல் ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரம்
பாகிஸ்தான் திணறல் ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரம்
ADDED : ஜன 26, 2025 09:37 PM

முல்தான்: இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அசத்த, பாகிஸ்தான் அணி தோல்வியை தவிர்க்க போராடுகிறது.
பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் முல்தானில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 163, பாகிஸ்தான் 154 ரன் எடுத்தன.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (52) நல்ல துவக்கம் கொடுத்தார். அமிர் ஜங்கூ (30), டெவின் இம்லாக் (35), கெவின் சின்க்ளேர் (28) ஓரளவு கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 244 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
பின், 254 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூது (2), முகமது ஹுரைரா (2) ஏமாற்றினர். பாபர் ஆசம் (31) ஆறுதல் தந்தார். கம்ரான் குலாம் (19) நிலைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 76 ரன் எடுத்து, 178 ரன் பின்தங்கி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கெவின் சின்க்ளேர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

