/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலியை முந்தினார் பன்ட்: டெஸ்ட் பேட்டர் தரவரிசையில்
/
கோலியை முந்தினார் பன்ட்: டெஸ்ட் பேட்டர் தரவரிசையில்
கோலியை முந்தினார் பன்ட்: டெஸ்ட் பேட்டர் தரவரிசையில்
கோலியை முந்தினார் பன்ட்: டெஸ்ட் பேட்டர் தரவரிசையில்
ADDED : அக் 23, 2024 10:13 PM

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் பன்ட் 6வது இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், 745 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்து 'நம்பர்-6' இடத்தை கைப்பற்றினார்.
சமீபத்தில் முடிந்த பெங்களூரு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 99 ரன் விளாசினார் பன்ட்.
மற்றொரு இந்திய வீரர் விராத் கோலி (720 புள்ளி) 7வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தவிர இவர், 8வது இடத்தை ஆஸ்திரேலியாவின் லபுசேனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (780) 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (917 புள்ளி) நீடிக்கிறார்.
பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா (871), அஷ்வின் (849) முதலிரண்டு இடங்களில் தொடர்கின்றனர். மற்றொரு இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா, தலா 801 புள்ளிகளுடன் 6வது இடத்தை நாதன் லியான் (ஆஸி.,), பிரபாத் ஜெயசூர்யாவுடன் (இலங்கை) பகிர்ந்து கொண்டுள்ளார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (442), அஷ்வின் (335) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.