/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
படோனி, ஆர்யா 'சிக்சர்' சாதனை: டில்லி பிரிமியர் லீக் தொடரில்
/
படோனி, ஆர்யா 'சிக்சர்' சாதனை: டில்லி பிரிமியர் லீக் தொடரில்
படோனி, ஆர்யா 'சிக்சர்' சாதனை: டில்லி பிரிமியர் லீக் தொடரில்
படோனி, ஆர்யா 'சிக்சர்' சாதனை: டில்லி பிரிமியர் லீக் தொடரில்
ADDED : ஆக 31, 2024 09:59 PM

புதுடில்லி: டில்லி பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் ஆயுஷ் படோனி, பிரியான்ஷ் ஆர்யா, 'சிக்சர்' சாதனை படைத்தனர்.
டில்லியில், பிரிமியர் லீக் 'டி-20' கிரிக்கெட் முதல் சீசன் நடக்கிறது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் தெற்கு டில்லி அணி (308/5, 20 ஓவர்) 112 ரன் வித்தியாசத்தில் வடக்கு டில்லி அணியை (196/8, 20 ஓவர்) வீழ்த்தியது. தெற்கு டில்லி அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (120), ஆயுஷ் படோனி (165) கைகொடுத்தனர்.
உலக சாதனை
பேட்டிங்கில் அசத்திய ஆயுஷ் படோனி, 55 பந்தில், 19 சிக்சர், 8 பவுண்டரி உட்பட 165 ரன் குவித்தார். 'டி-20' அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என சாதனை படைத்தார். இதற்கு முன், ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ஸ்(எதிர்: தாகா டைனமைட்ஸ், 2017, வங்கதேச பிரிமியர் லீக்), எஸ்தோனியாவின் சாஹில் சவுகான் (எதிர்: சைப்ரஸ், 2024) தலா 18 சிக்சர் அடித்திருந்தனர்.
ஒரே ஓவரில் 6 சிக்சர்வடக்கு டில்லி அணியின் மனன் பரத்வாஜ் வீசிய 12வது ஓவரில் வரிசையாக 6 சிக்சர் விளாசினார் பிரியான்ஷ் ஆர்யா. 'டி-20' அரங்கில் ஒரே ஓவரில் 6 சிக்சர் பறக்கவிட்ட இந்தியாவின் யுவராஜ் சிங் (2007, எதிர்: இங்கிலாந்து), வெஸ்ட் இண்டீசின் போலார்டு (2021, எதிர்: இலங்கை) வரிசையில் இணைந்தார்.
சூப்பர் ஜோடிபடோனி-ஆர்யா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 286 ரன் சேர்த்தது. 'டி-20' அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடியானது. இதற்கு முன் ஜப்பானின் லாச்லான் யமமோட்டா-லேக், கென்டல் கடோவாக்கி-பிளமிங் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 258 ரன் (எதிர்: சீனா, 2024) சேர்த்தது சாதனையாக இருந்தது.
இரண்டாவது இடம்இப்போட்டியில் 308 ரன் குவித்த தெற்கு டில்லி அணி, 'டி-20' அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் நேபாளம் அணி (314/3, எதிர்: மங்கோலியா, 2023) உள்ளது.