/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சிறந்த வீரர் ஷமர் ஜோசப் * முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார்
/
சிறந்த வீரர் ஷமர் ஜோசப் * முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார்
சிறந்த வீரர் ஷமர் ஜோசப் * முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார்
சிறந்த வீரர் ஷமர் ஜோசப் * முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார்
ADDED : பிப் 13, 2024 08:52 PM

துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரர் விருது வென்ற முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் ஷமர் ஜோசப்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 2021, ஜனவரி முதல், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திரங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 2024, ஜனவரி மாத விருதிற்கு இங்கிலாந்து பேட்டர் போப், வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசல்வுட் (ஆஸி.,), ஷமர் ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்) பரிந்துரை செய்யப்பட்டனர்.
இதில் ஷமர் ஜோசப் 24, சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய டெஸ்ட் (அடிலெய்டு) தொடரில் அறிமுகம் ஆன இவர், சர்வதேச அரங்கில் வீசிய தனது முதல் பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கினார். பிரிஸ்பேன் போட்டி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் சாய்த்து, வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு உதவினார். இதனால் டெஸ்ட் தொடர் சமன் ஆனது. 2 போட்டியில் 13 விக்கெட் சாய்த்து அசத்தினார்.
இதையடுத்து ஐ.சி.சி., சிறந்த வீரர் விருது வென்ற முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் ஷமர் ஜோசப். பெண்கள் பிரிவில் அயர்லாந்தின் அமி ஹன்ட்டர் சிறந்த வீராங்கனையாக தேர்வானார்.
ஷமர் ஜோசப் கூறுகையில்,'' உலக அரங்கில் இவ்விருது பெற்றது ஸ்பெஷல் உணர்வை தருகிறது. தொடர்ந்து கடினமாக முயற்சி செய்து பவுலிங், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு கைகொடுக்க விரும்புகிறேன்,'' என்றார்.