/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஹ்மத் ஷா இரட்டை சதம்: ஆப்கானிஸ்தான் அணி பதிலடி
/
ரஹ்மத் ஷா இரட்டை சதம்: ஆப்கானிஸ்தான் அணி பதிலடி
ADDED : டிச 28, 2024 10:19 PM

புலவாயோ: முதல் டெஸ்டில் ரஹ்மத் ஷா இரட்டை சதம் விளாச, ஆப்கானிஸ்தான் அணி பதிலடி கொடுத்தது.
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 95/2 ரன் எடுத்திருந்தது. ரஹ்மத் ஷா (49), ஹஷ்மதுல்லா ஷாஹிதி (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே பவுலர்கள் தடுமாறினர். ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மத் ஷா, டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக இரட்டை சதம் விளாசினார். மறுமுனையில் அசத்திய கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி சதம் கடந்து கைகொடுத்தார்.
ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 425 ரன் எடுத்திருந்தது. ரஹ்மத் ஷா (231), ஹஷ்மதுல்லா ஷாஹிதி (141) அவுட்டாகாமல் இருந்தனர்.

