/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை: விதர்பா முன்னிலை
/
ரஞ்சி கோப்பை: விதர்பா முன்னிலை
ADDED : பிப் 19, 2025 09:59 PM

நாக்பூர்: மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விதர்பா அணி வலுவான முன்னிலை பெற்றது.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, விதர்பா அணிகள் விளையாடுகின்றன. விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 188/7 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆகாஷ் ஆனந்த் (106) சதம் கடந்தார். தனுஷ் (33) ஓரளவு கைகொடுத்தார். மும்பை அணி முதல் இன்னிங்சில் 270 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. விதர்பா சார்பில் பார்த் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு துருவ் ஷோரே (13), கருண் நாயர் (6) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய யாஷ் ரத்தோட் அரைசதம் விளாசினார். ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 147 ரன் எடுத்து, 260 ரன் முன்னிலை பெற்றிருந்தது. யாஷ் (59), கேப்டன் அக்சய் வாட்கர் (31) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் ஷாம்ஸ் முலானி 2 விக்கெட் வீழ்த்தினார்.