/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி: தமிழக பவுலர்கள் அபாரம்
/
ரஞ்சி: தமிழக பவுலர்கள் அபாரம்
ADDED : பிப் 18, 2024 11:14 PM

சேலம்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் அசத்த பஞ்சாப் அணி 'பாலோ-ஆன்' பெற்றது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் முதல்தர ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. சேலத்தில் நடக்கும் லீக் போட்டியில் தமிழகம், பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. தமிழக அணி முதல் இன்னிங்சில் 435 ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 141/4 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு அன்மோல் மல்கோத்ரா (64*) அரைசதம் கடந்தார். கேப்டன் மன்தீப் சிங் (39), சன்விர் சிங் (39) சோபிக்கவில்லை. பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் அஜித் ராம் 6 விக்கெட் சாய்த்தார்.
'பாலோ-ஆன்' பெற்று 2வது இன்னிங்சை துவக்கிய பஞ்சாப் அணிக்கு நேஹல் வதேரா (103*) சதம் கடந்தார். ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 2வது இன்னிங்சில் 180/4 ரன் எடுத்து 19 ரன் முன்னிலை பெற்றிருந்தது. தமிழகம் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இன்றைய கடைசி நாளில் தமிழக பவுலர்கள் அசத்தினால் பஞ்சாப் அணியின் மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றி வெற்றி பெறலாம்.