/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி: தமிழக பவுலர்கள் திணறல்: சத்தீஸ்கர் அணி ரன் குவிப்பு
/
ரஞ்சி: தமிழக பவுலர்கள் திணறல்: சத்தீஸ்கர் அணி ரன் குவிப்பு
ரஞ்சி: தமிழக பவுலர்கள் திணறல்: சத்தீஸ்கர் அணி ரன் குவிப்பு
ரஞ்சி: தமிழக பவுலர்கள் திணறல்: சத்தீஸ்கர் அணி ரன் குவிப்பு
ADDED : அக் 27, 2024 10:54 PM

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் ஏமாற்ற, சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 500 ரன் குவித்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. கோவையில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 293 ரன் எடுத்திருந்தது. அனுஜ் (68), சஞ்ஜீத் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் அனுஜ் திவாரி (84), சஞ்ஜீத் தேசாய் (82) கைகொடுத்தனர். ஏக்நாத் கெர்கர் (52), அஜய் மாண்டல் (64) அரைசதம் விளாசினர். சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 500 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் அஜித் ராம் 4, மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் (7) ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி ஒரு விக்கெட்டுக்கு 23 ரன் எடுத்திருந்தது. கேப்டன் நாராயண் ஜெகதீசன் (6), அஜித் ராம் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.